சில தினங்களுக்கு முன்பு மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் உள்ள கருவறையில் தீ விபத்து ஏற்பட்டது. இதை பா.ஜ.க எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி தீயினால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டு, ஆகம விதிப்படி தேவப்பிரசன்னம் பார்தது புனரமைப்பு செய்து ஆலயத்தை உடனடியாக திறந்து தினசரி பூஜைகள் நடத்த வேண்டும் என்று ஹிந்துசமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் கேட்டுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து இன்று சேகர் பாபு அம்மன் கோயிலில் தீ விபத்தினால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த சமயத்தில் அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தியும் உடன் இருந்து அந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்பொழுது அங்கு வந்த சேகர் பாபுவிடம் முறையாக தேவப்பிரச்சனம் பார்த்து புனரமைப்புப் பணிகள் செய்யவும் , தங்க மேற்கூரை அமைக்கவும் அவர் கோரிக்கை வைத்தார். இதனை எம்.ஆர்.காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார்.
இந்த அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்ட உடனே எம்.ஆர்.காந்தி அங்கு சென்று தீயினால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார். இவர் பார்வையிட்ட அடுத்த நாளே பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன், நைனார் நாகேந்திரன் ஆகியோர் சேதங்களை பார்வையிட்டு காவல்துறைனரிடம் தீ விபத்து குறித்த காரணத்தை கண்டறியுமாறு கூறினார். இதனை தொடர்ந்து தற்போது அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு இங்கு வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
Facebook Comments Box