ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மன் கோயில்கள் சுற்றுலா – தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் அறிவிப்பு
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மன் கோயில்கள் சுற்றுலா ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 15 வரை செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு நாட்களில் ஒருநாள் சுற்றுலாக்களாக நடை பெறவுள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. ராஜேந்திரன் தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு பின்வருமாறு:
தமிழக முதலமைச்சரின் ஆலோசனையின் அடிப்படையில், சுற்றுலாத்துறையின் மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஆன்மிக சுற்றுலாப் பயணிகளுக்காக சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய நாகரிகளில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோயில்கள் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் இந்த ஒருநாள் சுற்றுலா பயணங்களில், மதிய உணவுடன் கூடிய சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலா திட்டங்கள்:
🔹 சென்னை-1 சுற்றுலா (8 அம்மன் கோயில்கள்):
திருவல்லிகேணி சுற்றுலா வளாகத்திலிருந்து புறப்பட்டு, காளிகாம்பாள், அங்காள பரமேஸ்வரி, வடிவுடையம்மன், பவானி அம்மன், பெரியபாளையம் அங்காள பரமேஸ்வரி, திருவுடையம்மன், பச்சையம்மன், பாலியம்மன், வில்லிவாக்கம் கோயில்கள்.
கட்டணம்: ₹1000
🔹 சென்னை-2 சுற்றுலா (10 அம்மன் கோயில்கள்):
திருவல்லிகேணியில் இருந்து புறப்பட்டு, கற்பகாம்பாள், முண்டகண்ணி, கோலவிழியம்மன், ஆலயம்மன், முப்பாத்தம்மன், பிடாரி இளங்காளி, அஷ்டலெஷ்மி, காமாட்சி அம்மன், தேவி கருமாரியம்மன், பாதாள பொன்னியம்மன் கோயில்கள்.
கட்டணம்: ₹800
🔹 மதுரை சுற்றுலா:
மீனாட்சி அம்மன், மாரியம்மன், காளியம்மன், வெட்டுடையார் காளியம்மன், முத்து மாரியம்மன், ராக்காயி அம்மன், அழகர் கோயில் ஆகிய கோயில்கள்.
கட்டணம்: ₹1400
விசேஷம்: மதிய உணவு, கோயில் பிரசாதம், விரைவு தரிசனம்.
🔹 திருச்சி சுற்றுலா:
வெக்காளியம்மன், அகிலாண்டேஸ்வரி, மாரியம்மன், உஜ்ஜயினி மாகாளி, மதுர காளியம்மன், பொன்னேஸ்வரி, உக்கிர காளியம்மன் கோயில்கள்.
கட்டணம்: ₹1100
🔹 தஞ்சாவூர் சுற்றுலா:
வராகி அம்மன், பங்காரு காமாட்சி, மகா மாரியம்மன், கற்பரட்சாம்பிகை, துர்கை அம்மன், பாடைகட்டி மாரியம்மன், கிரிகுஜாம்பிகை, விசாலாட்சி அம்மன், பெரியநாயகி அம்மன், தாராசுரம் கோயில்கள்.
கட்டணம்: ₹1400
இவை தவிர, 5 நாள் 108 அம்மன் கோயில்கள் சுற்றுலா மற்றும் 3 நாள் ராமேஸ்வரம் (ஆடி அமாவாசை) சுற்றுலா ஆகியவை தொடர்ந்தும் முன்பதிவிற்கு திறந்திருக்கும். பயணிகள் www.ttdconline.com இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலதிக தகவல்களுக்கு: 1800 425 31111 / 044-25333333 / 044-25333444.