ஏபிஆர்ஓ நியமனங்களில் விதி மீறல்: திமுக அரசை பழனிசாமி விமர்சனம்

0

ஏபிஆர்ஓ நியமனங்களில் விதி மீறல்: திமுக அரசை பழனிசாமி விமர்சனம்

தமிழகத்தில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (ஏபிஆர்ஓ) பணியிடங்களில் தகுதி இல்லாதவர்களை நியமிக்க திமுக அரசு முயலுகிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தெளிவான வழிகாட்டுதல்களுடன் தீர்ப்பு வழங்கியிருப்பதை குறிப்பிட்டு, அதனை மீறி திமுக ஐடி விங் உறுப்பினர்களுக்கு பதவி வழங்கப்படுவதாக தகவல்கள் உள்ளன என்றும், இது நிராகரிக்கப்பட வேண்டியதுதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2016-ஆம் ஆண்டு, உயர்நீதிமன்ற முதன்மை பெஞ்ச் வழங்கிய தீர்ப்பில், ஏபிஆர்ஓ பணிக்கான விதிகளை தளர்த்தி தகுதியான விண்ணப்பதாரர்களை புறக்கணிப்பது நியாயமற்றது எனவும், விதிவிலக்குகள் விதிமுறை மட்டுமே இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

அத்துடன், பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பு அல்லது மீடியா சயின்ஸ் போன்ற துறைகளில் இளங்கலை படிப்பு வைத்திருப்பதே அடிப்படைத் தகுதி எனும் கடந்த அரசாணையை திமுக அரசு திரும்பப் பெற்றுள்ளதாகவும், இதன் மூலம் தகுதியற்ற, அனுபவமற்ற நபர்களை தற்காலிக நியமனம் என்ற பெயரில் உள்ளடக்க அரசியல் காரணங்களுக்காக நியமிக்கப்படுகிறது எனவும் பழனிசாமி குற்றம்சாட்டினார்.

இதனால் தகுதியுடன் கல்வி கற்று வேலை தேடி காத்திருக்கும் இளைஞர்களின் நம்பிக்கையை தகர்க்கும் மோசமான முயற்சி நடைபெறுகிறது என்றும், இது எதிர்காலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

உயர்நீதிமன்ற உத்தரவுகளை மதித்து, தகுதியற்ற நியமனங்களை உடனடியாக கைவிட வேண்டும் என்றும், 2022-ஆம் ஆண்டு வெளியான அரசாணையைப் பின்பற்றி, டிஎன்பிஎஸ்சி மூலமாகவே தகுதியானவர்களை நியமிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Facebook Comments Box