அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ நிலை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமிக்கு இதுவரை Y+ பாதுகாப்பு இருந்த நிலையில், தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் Z+ பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.
விரைவில் நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் வரும் ஜூலை 7 ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரப் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்துக்கான பாடலையும், லோகோகளையும் இன்றைய நாளில் அவர் வெளியிட்டார்.
இதன் தொடர்ச்சியாக, ஜூலை 7ஆம் தேதி கோவையின் மேட்டுப்பாளையத்தில் அவர் தனது பிரச்சாரப் பயணத்தை துவக்க உள்ளார். இதனை முன்னிட்டு, அவரின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.