லோகோ, கட்சிப் பாடலை வெளியிட்டார் இபிஎஸ்… அதிமுக சுற்றுப்பயணம்…

0

2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாநிலம் முழுவதும் மேற்கொள்ளவுள்ள பிரச்சாரப் பயணத்திற்கான லோகோ மற்றும் இசைப்பாடல் இன்று (சனிக்கிழமை) அதிமுக தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.

அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர், தமுமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், பாஜக அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காக்கும் தமிழகம் மீட்டெடுப்போம்’ என்ற பேரெழுச்சி அடையாளத்துடன் மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்கிறார்.

இந்தப் பயணம் ஜூலை 7ஆம் தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் துவங்கப்பட உள்ளது. அதன் பிறகு, ஜூலை 23ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நிறைவடைகிறது.
Facebook Comments Box