அமித்ஷா நாளை இரவு சென்னைக்கு வருகிறார் – இரண்டு நாள் பயணம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை (ஏப்ரல் 8) இரவு 10.30 மணிக்கு சென்னை வந்தடைய உள்ளார். இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகிற அமித் ஷா, சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க உள்ளார்.
இக்கட்டண பயணத்தின் கீழ், அவர் நாளை மறுநாள் (ஏப்ரல் 9) காலை 10 மணி முதல் மாலை 4.20 மணி வரை பல்வேறு தரப்பினரையும் சந்தித்து ஆலோசனைகள் நடத்த உள்ளார். இதில், தமிழக பாஜக தலைவர்கள், முக்கிய கட்சி நிர்வாகிகள் மற்றும் சில சங்க பிரதிநிதிகள் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்பின், தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அமித் ஷா, அன்று மாலை டெல்லி திரும்பும் திட்டத்தில் உள்ளார்.
Facebook Comments Box