தன்னாட்சியை பாதுகாக்கும் உறுதியின் சான்றாக ஆபரேஷன் சிந்தூர் – அமித் ஷா

0

“தன்னாட்சியை பாதுகாக்கும் உறுதியின் சான்றாக ஆபரேஷன் சிந்தூர் – அமித் ஷா”

18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மராட்டியர்களின் பிரதமராக இருந்த முதலாம் பாஜிராவின் சிலை, மகாராஷ்டிராவின் புனே நகரில் அமைந்துள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் நிறுவப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது உரையில் பாஜிராவின் நினைவைப் பெருமைப்படுத்தினார்.

அவர் கூறியதாவது: “இந்த தேசிய பாதுகாப்பு அகாடமி, பாஜிராவின் சிலையை நிறுவ ஏற்ற இடம். ஏனெனில் இங்குதான் நம் நாட்டின் ராணுவத் தலைமைத்துவத்துக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

எனது மனதில் சந்தேகங்களும் எதிர்மறை எண்ணங்களும் உருவாகும் தருணங்களில், நான் பெரும்பாலும் சிவாஜி மகாராஜாவையும் பேஷ்வா பாஜிராவையும் நினைவு கூருவேன். பல சவால்களை எதிர்கொண்ட நேரத்தில், அவர்கள் இறையாண்மை மிக்க ஒரு வலுவான அரசை நிறுவ முடிந்தது. அது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

தன்னாட்சிக்காக போராட வேண்டிய சூழ்நிலை உருவானபோது, நாம் துணிந்து அதைப் பின்பற்றினோம். இன்று, அந்த தன்னாட்சியை பாதுகாக்கும் பொறுப்பை நம் நாட்டின் இராணுவம் மற்றும் தலைமை நிரூபிக்கிறது. அதன் ஒரு பிரதான உதாரணமாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ அமைந்துள்ளது. தன்னாட்சி பாதுகாப்பது என்பது இப்போது 140 கோடி இந்தியர்களின் கடமையாக உள்ளது.

சிவாஜி தொடங்கிய சுதந்திரப் போராட்டத்தை, பேஷ்வாக்கள் தொடர்ந்து முன்னெடுத்தனர். அவர்கள் முன்னெடுத்திருந்த போராட்டம் இல்லையெனில், இந்தியாவின் அடிப்படை அரசியல் அமைப்பு நிச்சயமாக பாதிக்கப்படும். குறிப்பாக, 1700 முதல் 1740 வரையிலான நாற்பது ஆண்டுகளில், பேஷ்வா பாஜிராவ் அளவிற்கு பெரும் வரலாற்றுச் சாதனைகளை யாரும் நிகழ்த்தவில்லை.”

18-ம் நூற்றாண்டில், 19வது வயதில் மராட்டிய அரசின் பேஷ்வாவாகப் பொறுப்பேற்ற பாஜிராவ், மத்திய மற்றும் வடஇந்தியப் பகுதிகளில் மராட்டிய ஆட்சியை விரிவுபடுத்த முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box