நாடாளுமன்றம் ஜூலை 21-ம் தேதி நடைபெறுகிறது….

0

ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது அனுமதியை வழங்கியுள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 13 மற்றும் 14-ம் தேதிகளில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இருக்கமாட்டாது என்று நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் கிறண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.

முதலில், இந்த கூட்டத்தொடரை ஆகஸ்ட் 12-ம் தேதியுடன் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது, அது ஆகஸ்ட் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு மாதம் நீடிக்கும் இந்த கூட்டத்தொடரின் போது, மத்திய அரசு பல முக்கியமான மசோதாக்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் பின்னர் முதல் முறையாக நாடாளுமன்றம் கூடவிருக்கிறது என்பதால், அந்த நடவடிக்கை, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தலையீடு ஆகியவற்றைப் பற்றிய விவாதமும் நடைபெறும் என கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தொடருக்கான அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் ஜூலை 19-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box