பாட்னா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகத் மகளிர் கல்லூரி, பாட்னா கல்லூரி, பாட்னா அறிவியல் கல்லூரி, வணிக மகாவித்யாலயா மற்றும் பாட்னா சட்டக் கல்லூரி உள்ளிட்ட ஐந்து கல்வி நிறுவனங்களில் முதல்வர் பதவிகள் காலியாக இருந்தன.
இந்நிலையில் புதிய முதல்வர்களை நியமிக்க வேண்டிய சூழ்நிலையில் பல்வேறு இடர்பாடுகள் எழுந்தன. குறிப்பாக அரசியல் தரப்பிலிருந்து அழுத்தங்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆளுநர் மாளிகை முற்றிலும் பகுப்பாய்வான மற்றும் பாரபட்சமற்ற முறையில், குலுக்கல் முறையைத் தேர்ந்தெடுத்தது.
இதற்கிணங்க சமீபத்தில் குலுக்கல் நடைமுறைப்பட்டு, ஒவ்வொரு கல்லூரிக்கும் தகுதியான பேராசிரியர்களின் பெயர்கள் தனித்தனியாக எழுதப்பட்ட காகிதங்கள் பாட்டில்களில் போடப்பட்டன. பின்னர், அந்த பாட்டில்களில் இருந்து ஒரு பெயர் தேர்வுசெய்யப்பட்டது.
இந்த முறையின் அடிப்படையில், மகத் மகளிர் கல்லூரிக்கு நாகேந்திர பிரசாத் வர்மா, பாட்னா கல்லூரிக்கு அனில் குமார், பாட்னா அறிவியல் கல்லூரிக்கு அல்கா, வணிக மகாவித்யாலயாவுக்கு சுகாலி மேத்தா மற்றும் பாட்னா சட்டக் கல்லூரிக்கு யோகேந்திர குமார் வர்மா ஆகியோர் புதிய முதல்வர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்நியமன முறைக்கு ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.