தெற்கு காஷ்மீரில் உள்ள அமர்நாத் தெய்வீக யாத்திரை கடந்த 3ம் தேதி ஆரம்பமானது. ஜம்முவின் பகவதிநகரில் இருந்து பஹல்காம் அடிவார முகாமை நோக்கி அமர்நாத் பக்தர்கள் நேற்று காலை பல பேருந்துகளில் புறப்பட்டனர்.
ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையின் சந்தர்கோட் லாங்கர் பகுதியை கடக்கும் போது, ஒரு பேருந்தின் பிரேக் திடீரென வேலை செய்யாமல் போனதால், அது முன்னால் சென்ற நான்கு பேருந்துகளை மோதி தாக்கியது. இந்த விபத்தில் 36 பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மாற்று வாகனங்களில் அவர்கள் யாத்திரையைத் தொடர அனுப்பப்பட்டனர்.
Facebook Comments Box