தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது:
ஓலா, ஊபர் போன்ற தனியார் வாடகை கார்கள் கட்டண உயர்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது மிகுந்த வருத்தமளிக்கக்கூடியது. பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாது, பெருநிறுவனங்களுக்கு கட்டணத்தை தங்களது விருப்பப்படி உயர்த்த அனுமதித்திருப்பது ஜனநலத்துக்கு எதிரானதாகும்.
மேலும், ‘பீக் ஹவுஸ்’ நேரங்களில் கட்டணத்தை இரட்டிப்பு அளவுக்கு உயர்த்தும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதும் வேதனைக்குரியதாகும். இந்த உயர்வுகள், பொருளாதாரத்தில் பின்னடைவில் உள்ள மக்களை கடுமையாக பாதிக்கும். எனவே மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த முடிவை மீண்டும் பரிசீலித்து, வழங்கப்பட்ட கட்டண உயர்வு அனுமதியை வாபஸ் பெற வேண்டும் எனவே அவர் வலியுறுத்தியுள்ளார்.
Facebook Comments Box