சசிகுமார் நடிப்பில் சத்யசிவா இயக்கிய ‘ஃப்ரீடம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

0

சசிகுமார் நடிப்பில் சத்யசிவா இயக்கிய ‘ஃப்ரீடம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

சசிகுமாரின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஃப்ரீடம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. சத்யசிவா இயக்கியுள்ள இந்த படம் ஜூலை 10-ஆம் தேதி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லிஜோ மோல் ஜோஸ், சுதேஷ் நாயர், மாளவிகா, போஸ் வெங்கட், ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ட்ரெய்லரின் இயல்பு?

இலங்கையில் இருந்து தஞ்சம் தேடி தமிழகத்திற்கு வந்த ஈழத் தமிழர்களின் வாழ்கையை மையமாகக் கொண்டு படம் நகர்கிறது என்பதை ட்ரெய்லர் வெளிப்படுத்துகிறது. இதற்கு முன்பு சசிகுமார் நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படமும் இதே பின்னணியை கொண்டிருந்தாலும், அது காமெடியும் உணர்வும் கலந்து இருக்கும் வகையில் அமைந்தது. ஆனால் ‘ஃப்ரீடம்’ திரைப்படம் முழுமையாக சீரியஸ் களத்திலும், அகதிகளின் துயர அனுபவங்களையும் போராட்டங்களையும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்படுத்துவதாக தோன்றுகிறது.

Facebook Comments Box