விஜய் சேதுபதி மகன் ஹீரோவாக அறிமுகம் ‘ஃபீனிக்ஸ்’ படத்தை நடிகர் விஜய் பாராட்டினார்

0

விஜய் சேதுபதி மகன் ஹீரோவாக அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ படத்தை நடிகர் விஜய் பாராட்டினார்

பிரபல ஸ்டண்ட் இயக்குநர் அனல் அரசு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகிறார். இதற்கு முன்பு, ‘நானும் ரவுடி தான்’ மற்றும் ‘சிந்துபாத்’ ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்த சூர்யா, இப்போது முழுமையான ஹீரோவாக நடிக்கிறார்.

ஆக்‌ஷன் மற்றும் விளையாட்டு பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளராக சாம்.சி.எஸ் பணியாற்றியுள்ளார். இதற்கான வெளியீட்டு தேதி முன்னதாக கடந்த நவம்பர் 14 என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் சில காரணங்களால் படம் ஒத்திவைக்கப்பட்டு தற்போது ஜூலை 4 ஆம் தேதி வெளியிடப்படவிருக்கிறது.

இந்த படத்தைக் காணும் வாய்ப்பு பெற்ற நடிகர் விஜய், படத்தையும் சூர்யா சேதுபதியின் நடிப்பையும் பாராட்டியதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். விஜய், சூர்யா மற்றும் இயக்குநர் அனல் அரசுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

Facebook Comments Box