திமுகவை குறிவைத்து உருவாக்கப்பட்ட ‘ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படம், ஆகஸ்ட் 1ம் தேதி ரிலீஸ்!

0

திமுகவை குறிவைத்து உருவாக்கப்பட்ட ‘ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படம், ஆகஸ்ட் 1ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

‘கனா’ மற்றும் ‘தும்பா’ படங்களுக்கு பிறகு, நடிகர் தர்ஷன் மீண்டும் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் தான் ‘ஹவுஸ் மேட்ஸ்’. ஃபேண்டஸி, ஹாரர் மற்றும் நகைச்சுவை கலந்து உருவாக்கப்பட்ட இப்படம், சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது. ஆகஸ்ட் 1ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் தர்ஷனுடன் சேர்ந்து காளி வெங்கட், அர்ஷா, சாந்தினி பைஜூ, வினோதினி, தீனா, அப்துல் லீ, மாஸ்டர் ஹென்ரிக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இயக்கத்தை ராஜவேல் கவனித்துள்ளார். இவர், இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் உதவியாளராக பணியாற்றிய அனுபவமுடையவர்.

‘ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படத்தை விஜய பிரகாஷ் மற்றும் சக்திவேல் இணைந்து தயாரித்துள்ளனர். ஒளிப்பதிவை சதீஷ் கவனித்துள்ளதுடன், இசையமைப்பை ராஜேஷ் முருகேசன் மேற்கொண்டுள்ளார்.

அடுக்குமாடி குடியிருப்பை மையமாகக் கொண்டு, நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளையும், நடுத்தர குடும்பங்களின் வாழ்க்கையையும் பிரதிபலிக்கும் விதமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box