வடிவேலு மற்றும் ஃபஹத் ஃபாசில் இணையும் ‘மாரீசன்’ திரைப்படம் ஜூலை 25ம் தேதி திரையிடப்படும்

0

வடிவேலு மற்றும் ஃபஹத் ஃபாசில் இணையும் ‘மாரீசன்’ திரைப்படம் ஜூலை 25ம் தேதி திரையிடப்படும் என தயாரிப்புக்குழு அறிவித்துள்ளது.

‘மாமன்னன்’ திரைப்படத்துக்குப் பிறகு வடிவேலு மற்றும் ஃபஹத் ஃபாசில் இணைந்து நடிக்கும் புதிய படம் ‘மாரீசன்’. இந்த படத்தை சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளார். இதில் விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை வி. கிருஷ்ணமூர்த்தி எழுதியுள்ளார். அதேசமயம், அவர் கிரியேட்டிவ் டைரக்டராகவும் செயல்பட்டுள்ளார். இசையை யுவன் சங்கர் ராஜா அமைத்துள்ளார்; ஒளிப்பதிவை கலைச்செல்வன் சிவாஜி மேற்கொண்டுள்ளார்.

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98-வது தயாரிப்பாக உருவாகியுள்ள ‘மாரீசன்’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் பிற பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. சமீபத்தில் வெளியான டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. கிராமிய சூழலில் அமைந்த ஒரு டிராவலிங் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.
Facebook Comments Box