‘லக்கி பாஸ்கர்’ இரண்டாம் பாகம் உருவாக்கம் திட்டத்தில் உள்ளது என இயக்குநர் வெங்கி அட்லுரி உறுதிபடுத்தியுள்ளார்.
பிரபல நடிகர் சூர்யா நடித்துவரும் புதிய திரைப்படத்தை தற்போது இயக்கி வருகிறார் வெங்கி அட்லுரி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஒரு ஊடகத்துக்கான பேட்டியில் கலந்து கொண்ட இயக்குநர், சூர்யாவுடன் பணியாற்றும் அனுபவம் மற்றும் படத்தின் மையக்கரு பற்றி விரிவாக பேசியுள்ளார்.
அந்த பேட்டியில், ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பாகவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் வெங்கி அட்லுரி கூறியதுபடி, ‘லக்கி பாஸ்கர் 2’ படத்தை இயக்கும் திட்டம் தற்போது உருவாக்க நிலையில் உள்ளது. துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, ராம்கி, சாய் குமார் உள்ளிட்ட பலர் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம், நாக வம்சி தயாரிப்பில் வெளியானதும், ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது. மேலும், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இரண்டாம் பாகம் எப்போது படமாக்கத்தொடங்கும் என்ற தகவலை இயக்குநர் தற்போது வரை வெளியிடவில்லை. எனவே, சூர்யா நடிக்கும் திரைப்படத்தின் பணிகள் முடிந்த பிறகே ‘லக்கி பாஸ்கர் 2’ தொடங்குமா என்பதற்கான உறுதி எதிர்காலத்தில் தெரியவரும்.