அரசுப் பள்ளி மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஓவிய ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
சேலம் அருகே உள்ள அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியர் சீனிவாசன் (59). அவர் பள்ளியில் மூன்று மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆசிரியரின் செயல்களால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள், இது குறித்து தங்கள் பெற்றோரிடம் கூறி கதறி அழுதனர்.
இதைத் தொடர்ந்து, மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, ஓவிய ஆசிரியர் சீனிவாசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த விவகாரம் குறித்து காவல்துறையினரும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Facebook Comments Box