சிறுமிகள் அளித்த புகாரின் அடிப்படையில் கிருஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் உட்பட இரண்டு பேர் கைது

0

சிறுமிகள் அளித்த புகாரின் அடிப்படையில் கிருஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை நகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.

கோவை நகர காவல் ஆணையரக அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் புகார் அளிக்க காத்திருப்பு அறை மற்றும் நூலகத்தை காவல் ஆணையர் சரவண சுந்தர் திறந்து வைத்தார்.

பின்னர், புகார் அளிக்க வரும் பொதுமக்களின் வசதிக்காக இலவச வைஃபை வசதியுடன் கூடிய காத்திருப்பு அறை திறக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

நவ இந்தியா பகுதியில் தனியார் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து துணை ஆணையர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும், மாணவர்கள் அளித்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

சிறுமிகள் அளித்த புகாரின் அடிப்படையில் கிருஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் மற்றும் அவரது மைத்துனர் பென்னட் ஹாரிஸ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

Facebook Comments Box