திமுகவில் புதிய நியமனங்கள்: கல்வியாளர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அணிக்கு தலைவர்கள் தேர்வு
திமுக கல்வியாளர் அணியின் தலைவராக புலவர் ந.செந்தலை கவுதமன், செயலாளராக தமிழச்சி தங்கப்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், மாற்றுத் திறனாளிகள் அணியின் தலைவராக ரெ.தங்கம் மற்றும் செயலாளராக பேராசிரியர் டி.எம்.என். தீபக் நியமிக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ஜூன் 1 ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில், திமுக சட்ட விதிகளுக்கு ஏற்ப கல்வியாளர் அணி மற்றும் மாற்றுத் திறனாளிகள் அணி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இந்நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன,” என்று குறிப்பிட்டுள்ளார்.
Facebook Comments Box