“ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை பற்றிய ஆலோசனை கூட்டம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஜூன் 28 (சனிக்கிழமை) அன்று காணொலி மூலம் நடைபெறவுள்ளதாக, கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஓரணியில் தமிழ்நாடு” திட்டத்தின் கீழ் நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை தொடர்பான விவாதத்திற்கு, மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அணிகள் சார்ந்த செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்துகொள்ளும் கூட்டம், ஜூன் 28 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு காணொலி காட்சி மூலம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் அனைவரும் கட்டாயமாக பங்கேற்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Facebook Comments Box