ஐந்து நாடுகள் பயணம்: கானாவை சென்றடைந்த பிரதமர் மோடி

0

ஐந்து நாடுகள் பயணம்: கானாவை சென்றடைந்த பிரதமர் மோடி

ஜூலை 2 ஆம் தேதி புதன்கிழமையில் தனது ஐந்து நாடுகளுக்கான வெளிநாட்டு பயணத்தை தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, முதல் ஆபரிக்க நாடான கானாவை சென்றடைந்தார். அங்கு அவரை கானா அதிபர் ஜான் டிராமனி மஹாமா, அரசு அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் அங்குள்ள இந்தியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

ஜூலை 2 முதல் 9 வரை நடைபெறும் இந்தப் பயணத்தில் பிரதமர் மோடி கானா, டிரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய ஐந்து நாடுகளுக்குச் செல்கிறார். பயணத்தின் ஒரு பகுதியாக கானாவுடன் இந்தியா பல முக்கிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வியாழக்கிழமை ஜூலை 3 அன்று பிரதமர் மோடி கானா நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார். அதன்பின், அவர் டிரினிடாட் & டொபாகோவுக்குப் பயணம் தொடரவுள்ளார்.

புலம்பெயர் இந்தியர்களின் உற்சாக வரவேற்பு

கானா வந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் பாரம்பரிய நடனங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. கானாவில் வாழும் இந்தியர்கள் பிரதமரை சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பரதநாட்டியக் கலைஞர்கள் நடனமாடி அவருக்கு மரியாதை செலுத்தினர். பிரதமர் அவர்களுடன் நேரில் பேசுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக அங்கு வாழும் இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Facebook Comments Box