“அதிமுகவை தோழமைக் கட்சியாக விஜய் பார்க்கிறாரா?” – திருமாவளவன்

0

“தவெக செயற்குழுக் கூட்டத்தில், அதிமுக குறித்து நடிகர் விஜய் எதுவும் தெரிவிக்கவில்லை. அதிமுகவை அவர் தோழமைக் கட்சியாகவே கருதுகிறாரா?” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வியெழுப்பினார்.

இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “திமுக முன்னெடுத்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டத்தை, தேசிய நிகரான பார்வையில் காணப்பட வேண்டிய முக்கியமான சிந்தனையாகவே கருதுகிறேன். தமிழகத்தில் சங்க பரிவார் அரசியலுக்கு இடமளிக்காமல் தடுக்கும் வகையில், அனைத்து ஜனநாயக கட்சிகளும் ஒரே அணியில் இணையவேண்டும்.

பாமக தொடர்பான விவகாரத்தில், இருவரும் – தந்தை மற்றும் மகன் – மீண்டும் இணைவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஒரே பாமக என்ற கூட்டணியாகவே அவர்கள் தேர்தலுக்கு வரும் என எதிர்பார்க்கலாம். நடிகர் விஜய்க்கு மத்திய அரசு ஏற்கெனவே ஒய் பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளது. அதேபோல் தற்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை விசிக வரவேற்கிறது.

அதிமுக கூட்டணியில் முக்கிய பங்கு வகிக்கும் அதிமுக, பெரும் கட்சியாக இருப்பதோடு, தேர்தலுக்குப் பிறகு முதல்வர் யார் என்பதை தீர்மானிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தால், அதற்கு பழனிசாமி நேரடியாக பதில் கூற வேண்டும். திமுக மற்றும் பாஜகவை கொள்கை எதிரிகள் என கூறிய தவெக தலைவர் விஜய், அதிமுக குறித்து எந்தக் கருத்தும் சொல்லவில்லை. இது அதிமுகவை தோழமைக் கட்சியாகவே அவர் காண்கிறாரா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. இதற்கு விளக்கம் அளிக்க வேண்டியது அவருடைய பொறுப்பு” என்றார் திருமாவளவன்.

Facebook Comments Box