யுஎஸ் ஒபனில் ஆயுஷ் சாம்பியன்!

0

அமெரிக்காவின் அயோவா நகரில் நடைபெற்ற யுஎஸ் ஓபன் பாட்மிண்டன் தொடரில், ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டி மகிழ்ச்சிகரமாக நிறைவடைந்தது. இப்போட்டியில் இந்தியாவின் எழுச்சி பெறும் பாட்மிண்டன் வீரர் ஆயுஷ் ஷெட்டி, தரவரிசையில் 3வது இடம் பிடித்துள்ள கனடாவின் பிரையன் யங்கை எதிர்கொண்டார்.

மொத்தம் 47 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில், ஆயுஷ் ஷெட்டி 21-18, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இது அவரது திறமையை நிரூபிக்கும் முக்கியமான வெற்றியாகும்.

மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் இந்தியாவின் 16 வயது சிறுமியான தன்வி சர்மா, முதலிடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை பெய்வென் ஜாங்கை எதிர்கொண்டார்.

46 நிமிடங்கள் நீடித்த கடினமான ஆட்டத்தில் தன்வி சர்மா 11-21, 21-16, 10-21 என்ற செட் கணக்கில் போராடியும் தோல்வியைத் தழுவ வேண்டிய நிலை ஏற்பட்டது.

Facebook Comments Box