விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
லண்டனில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், ஆடவர் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் 6-ம் நிலை வீரராக உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 154-ம் இடத்தில் உள்ள இங்கிலாந்து வீரர் டேனியல் இவான்ஸை 6-3, 6-2, 6-0 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து மூன்றாவது சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
அதேபோல், 11-ம் நிலை வீரராக உள்ள ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், 115-ம் இடத்தில் உள்ள பிரான்சின் ஆர்தர் கசாக்ஸை 4-6, 6-2, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் வென்றார்.
மகளிர் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில், 10-ம் நிலை வீராங்கனையாக உள்ள அமெரிக்காவின் எம்மா நவரோவா, 46-ம் நிலை வீராங்கனை ரஷ்யாவின் வெரோனிகா குடெர்மெடோவாவை 6-1, 6-2 என்ற நேரடி செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றார்.