ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டர் மீண்டும் துவண்டது – 286 ரன்களில் ஆல் அவுட்

0

ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டர் மீண்டும் துவண்டது – 286 ரன்களில் ஆல் அவுட்

கிரெனடாவில் நேற்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி மீண்டும் தொடக்கத்திலேயே தடுமாறி, 286 ரன்களில் சுருண்டது. மேற்கிந்திய தீவுகள் அணிக்காக அல்சாரி ஜோசப் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பட்ட் கம்மின்ஸ், முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். ஆனால், தொடக்க வீரர்கள் சரிவை சந்தித்தனர். ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுகளுக்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ஆஸ்திரேலியாவை, பியூ வெப்ஸ்டர் மற்றும் அலெக்ஸ் கேரி இணைந்து மீட்டனர். இருவரும் 6-வது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்தனர்.

வெப்ஸ்டர் 60 ரன்களும், கேரி 63 ரன்களும் எடுத்தனர். கீழ் வரிசை வீரர்கள் சற்று பங்களித்தாலும், அணியின் இனிங்ஸ் 286 ரன்களில் முடிந்தது. ஜோசப்புக்கு அடுத்து, ஜெய்டன் சீல்ஸ் 2 விக்கெட்டுகளும், மற்ற பந்துவீச்சாளர்கள் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். வெப்ஸ்டர் ரன் அவுட் ஆனார்.

முன்னதாக, கவாஜா மற்றும் கோன்ஸ்டாஸ் முதல்விக்கெட்டுக்கு சிறப்பாக தொடங்கி 47 ரன்கள் சேர்த்தனர். ஆனால் அதனைத் தொடர்ந்து விரைவில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. ஸ்டீவ் ஸ்மித், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட் ஆகியோரும் அபாயகரமாக இருந்த பந்துகளில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

பாட் கம்மின்ஸ் (17), நாதன் லயன் (16), ஹேசில்வுட் (10) ஆகியோர் சிறு பங்களிப்பை வழங்கினர். வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முன்பே நிறுத்தப்பட்டது. இன்று இரண்டாம் நாள், மேற்கிந்திய தீவுகள் தங்களின் முதல் இன்னிங்ஸை துவங்கும்.

Facebook Comments Box