குகேஷ் உடன் மீண்டும் தோல்வி – ‘எனக்கு செஸ் விளையாட பிடிக்கவில்லை’ என கார்ல்சன் விரக்தி

0

குரோஷியாவில் நடைபெற்று வரும் சூப்பர் யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில், உலக தரவரிசையில் முதலிடம் வகிக்கும் மேக்னஸ் கார்ல்சனை இந்தியாவின் குகேஷ் தோற்கடித்தார். கடந்த மாதம், நார்வே செஸ் கிளாசிக்கல் பிரிவிலும் கார்ல்சனை வெற்றிகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பலமுறை உலக சாம்பியனாக இருந்த கார்ல்சன், குகேஷை ஏற்கனவே பலவீனமான வீரர் என விமர்சித்திருந்தார். ஆனால் வியாழக்கிழமை நடைபெற்ற 6வது சுற்றில், 19 வயதான குகேஷ் தனது ஆட்டத்தால் அவரை மீண்டும் வீழ்த்தினார்.

நார்வே செஸ் தொடரின் தோல்விக்குப் பிறகு, கார்ல்சன் வெறுப்புடன் மேசையை ஓங்கி தாக்கிய சம்பவமும் நினைவில் கொள்ளத்தக்கது. தற்போது, சூப்பர் யுனைடெட் தொடரில் குகேஷ் முன்னிலை வகிக்கிறார்.

இது குறித்து கார்ல்சன் கூறியதாவது:

“எனக்கு தற்போது செஸ் விளையாடவே விருப்பமில்லை. என் ஆட்டத்தில் ஓட்டம் இல்லை போல இருக்கிறது. இந்த வடிவத்தில் குகேஷ் மிகச் சிறப்பாக விளையாடுகிறார். தொடர்ந்து ஐந்து வெற்றிகளை அவர் பெற்றுள்ளார் – இது வெகுவாக பாராட்டப்படவேண்டியது. அவர் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்துகிறார். ஆனால் நான் மிகவும் மோசமாக விளையாடி வருகிறேன்.”

Facebook Comments Box