பெங்களூருவில் இன்று நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி

0

நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் நிகழ்ச்சி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டிரவா விளையாட்டு மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வுக்கு இந்திய தடகள கூட்டமைப்பும், உலக தடகள அமைப்பும் ஆதரவளித்துள்ளன. இந்த போட்டிக்கு உலக தடகள அமைப்பால் ‘ஏ’ வகை தரநிலை வழங்கப்பட்டுள்ளது.

இந்த பிரமாண்ட ஈட்டி எறிதல் போட்டியில், ஒலிம்பிக் பதக்கம் இரண்டு முறை வென்றுள்ள இந்தியாவின் நீரஜ் சோப்ரா, 2016ஆம் ஆண்டின் ஒலிம்பிக் வென்ற ஜெர்மனியின் தாமஸ் ரோஹ்லர், 2015ஆம் ஆண்டில் உலக சாம்பியன் பட்டம் வென்ற கென்யாவின் ஜூலியஸ் யெகோ, அமெரிக்காவின் கர்டிஸ் தாம்சன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மேலும், செக் குடியரசின் மார்ட்டின் கோனெக்னி, பிரேசிலின் லூயிஸ் மவுரிசியோ டா சில்வா, இலங்கையின் ருமேஷ் பதிரேஜ், போலந்தின் சைப்ரியன் மிர்சிக்லோட் ஆகியோரும் இதில் போட்டியிடுகின்றனர்.

இந்தோர்களுடன் இந்தியாவின் சச்சின் யாதவ், யாஷ்விர் சிங், ரோஹித் யாதவ், சாஹில் சில்வால் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற சச்சின் யாதவ் முக்கிய பங்கு வகிக்கிறார். மொத்தம் 12 பேர் பங்கேற்கும் இந்த போட்டியில், நீரஜ் சோப்ரா 90 மீட்டருக்கு மேல் ஈட்டியை எறிய திட்டமிட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments Box