கால் இறுதியில் பேயர்ன் மூனிச்சை வீழ்த்திய பிஎஸ்ஜி: அரை இறுதியில் ரியல் மாட்ரிட் உடன் மோதல்

0

அட்லாண்டா: நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிஎஸ்ஜி அணி, ஜெர்மனியின் பேயர்ன் மூனிச் அணியை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த வெற்றியினால் பிஎஸ்ஜி அணி தனது திறமையை மறுபடியும் நிரூபித்துள்ளது. இந்தப் போட்டியின் முக்கிய அம்சங்களை பார்ப்போம்.

அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஃபிபா கிளப் உலகக் கோப்பை, ஒவ்வொரு கண்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நடக்கிறது. இதன் மூலமாக 2026ஆம் ஆண்டு அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள ஃபிபா உலகக் கோப்பையின் முன்னோட்டத்தை தருகிறது.

இந்த முறை முதல்முறையாக 32 கிளப் அணிகள் கலந்து கொண்டுள்ளன. தற்போது அந்த அணிகளில் நான்கு சிறந்த அணிகள் அரை இறுதிக்குள் சென்று, சாம்பியன் பட்டத்துக்காக போட்டியிட உள்ளன.

பிஎஸ்ஜி vs பேயர்ன் மூனிச்: ஜூலை 5 அன்று இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு அமெரிக்காவின் அட்லாண்டாவில் இந்த முக்கியமான ஆட்டம் நடைபெற்றது. ஐரோப்பாவின் இரண்டு பெரிய அணிகள் நேருக்கு நேர் மோதிய இப்போட்டி மிகவும் பரபரப்பாக அமைந்தது. பேயர்ன் மூனிச் அணியில் ஹாரிகேன், முல்லர், மூசியாலா போன்ற முன்னணி வீரர்கள் களமிறங்கியிருந்தனர்.

மொத்த ஆட்டத்திலும் இரு அணிகளும் கோல் அடிப்பதற்கான கடும் முயற்சியில் ஈடுபட்டன. பந்தின் மீதான கட்டுப்பாட்டில் பேயர்ன் மூனிச் 55 சதவீதத்தையும், பிஎஸ்ஜி 45 சதவீதத்தையும் பெற்றிருந்தது.

ஆட்டத்தின் 78வது நிமிடத்தில் பிஎஸ்ஜி வீரர் டிசிரே துவே முதல் கோலை அடித்தார். பின்னர், பிஎஸ்ஜி வீரர்கள் இருவரும் மோசமான நடத்தை காரணமாக நடுவரால் நேரடி சிவப்பு அட்டையில் வெளியேற்றப்பட்டனர். இதன் பின், பேயர்ன் மூனிச் அணி சமன்செய்ய முயன்றது.

ஆட்ட நேரம் முடிந்த பிறகு, கூடுதல் ஆறு நிமிடங்கள் வழங்கப்பட்டன. 90+6வது நிமிடத்தில், பிஎஸ்ஜியின் முனைய வீரர் டெம்பெல்லே, அக்ரஃப் ஹக்கிமி அளித்த சரியான பாஸ் மூலம் அசத்தலான இரண்டாவது கோலை அடித்தார். இது பேயர்ன் மூனிச் அணியின் எதிர்பார்ப்புகளுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்த ஆட்டம், இந்த தொடரின் மிகவும் தரமான போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இதேபோன்று, ஜூலை 6 காலை நடைபெற்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி, பொருஷியா டார்ட்மண்ட் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இதன் மூலம் ஜூலை 10 அன்று பிஎஸ்ஜி மற்றும் ரியல் மாட்ரிட் அணிகள் அரை இறுதி ஆட்டத்தில் மோத உள்ளன. மற்றொரு அரை இறுதியில் ஃப்ளூமினெஸ் மற்றும் செல்சீ அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இறுதி ஆட்டம் ஜூலை 14 அன்று நடக்க இருக்கிறது.

Facebook Comments Box