கிராமப்புறங்களில் எல்இடி திரைகள் அமைக்கும் திட்டத்தின் பின்னணியில், நூற்றுக்கணக்கான கோடிகள் மோசடி செய்ய திமுக அரசு திட்டமிட்டுள்ளதாக, அதிமுக பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து இன்று வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
“ஒரு அரசு பொறுப்பேற்கும் முக்கிய நோக்கம், மக்களின் நலனுக்காக பணியாற்றுவதாக இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய திமுக ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகம், கடந்த...
தவறான சிகிச்சையால் தாய் உயிரிழந்த சம்பவம் குறித்து தேமுதிக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த இலக்கியா என்ற கர்ப்பிணிப் பெண், குழந்தையை சிறப்பாக பெற்ற பிறகு, மருத்துவர்கள் வழங்கிய தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி வேதனையை ஏற்படுத்துகிறது. இது குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த்...
"பட்டாசு ஆலை விபத்துகள் தொடராமல் இருக்க, பாதுகாப்பு விதிகளை மீறும் அதிகாரிகளை கைது செய்வதே ஒரே வழி" – புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
விருதுநகர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில்களில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படாததால், மீண்டும் மீண்டும் விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், புதிய தமிழகம் கட்சியின்...