மாநகராட்சி மற்றும் நகராட்சிகளின் கடைகளை 9 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் அரசாணைக்கு இடைக்காலத் தடை

0

மாநகராட்சி மற்றும் நகராட்சிகளின் கடைகளை 9 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் அரசாணைக்கு இடைக்காலத் தடை

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் சொந்த கடைகள் 9 ஆண்டுகள் வரை குத்தகைக்கு விடப்படுவதை எதிர்த்து, காரைக்குடியைச் சேர்ந்த சிவராஜ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், காரைக்குடி மாநகராட்சி ஆணையர் மே 26-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், கடைகள் 9 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளதாகவும், இது தமிழக ஊரக உள்ளாட்சி விதிகளை மீறுவதாகவும் கூறியுள்ளார்.

நடப்பு விதிகளின்படி, அரசு சொந்தமான இடங்களை 3 ஆண்டுகள் மட்டுமே குத்தகைக்கு விட முடியும் என்றும், ஒரே நபருக்கு தொடர்ந்து குத்தகை வழங்க முடியாது என்றும் அவ்விதிகள் குறிப்பிடுகின்றன.

ஏழை வியாபாரிகள் வாடகைக் கடைகளுக்காக காத்திருக்கும் நிலையில், 9 ஆண்டுகள் நீண்டகால குத்தகை வழங்குவது வழிகேடாகும் என்றும், ஏற்கனவே உள்ள குத்தகையாளர்களுக்கு நீட்டிப்பு வழங்கும் நடவடிக்கையும் சட்டவிரோதமானது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் ஏ.டி. மரிய கிளாட் ஆகியோர், மாநில நகராட்சி நிர்வாகத்தின் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து, முதன்மைச் செயலரும் இயக்குநரும் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Facebook Comments Box