பருவமழை காலங்களில் மழை நீர் தேங்காமல் தடுக்க 21 நீர்வழி கால்வாய்களில் ரூ.211.86 கோடியில் வெள்ளத் தடுப்புச் சுவர்

0

ஈரான் யுரேனியம் செறிவூட்டலை நிறுத்தினால், அமெரிக்கா பல்வேறு சலுகைகள் வழங்க முன்வருகிறது

ஈரான், யுரேனியம் செறிவூட்டும் செயல்முறையை நிறுத்தினால், அணுமின்சக்தி திட்டத்தில் 30 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு, பொருளாதார தடைகள் நீக்கம், வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்ட 6 பில்லியன் டாலர் நிதி விடுவிப்பு உள்ளிட்ட பல சலுகைகளை வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

முன்னதாக மின்சார உற்பத்திக்காக மட்டுமே அணுசக்தியை பயன்படுத்துவோம் என தெரிவித்திருந்த ஈரான், அணுஆயுத தயாரிப்புக்காக யுரேனியத்தை செறிவூட்டும் பணியில் ஈடுபட்டது. இதனை தடுப்பதற்காக, ஈரான் அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியது. இதனையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே ஓமனில் 5 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

ஆறாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு முன்பாக, இஸ்ரேல் ஈரான்மீது தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானின் அணுசக்தி உற்பத்தி மையங்கள் இலக்காகக் கொள்ளப்பட்டன. இதையடுத்து, ஈரான் – இஸ்ரேல் இடையிலான மோதல் தீவிரமடைந்த நிலையில், அமெரிக்காவும் ஈரானின் அணுத்தளங்களை நோக்கி சக்திவாய்ந்த குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

தற்போது, இரு நாடுகளுக்கும் இடையே சண்டைநிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு அமைதி நிலவுகிறது. இந்த சூழ்நிலையில், அமெரிக்கா மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஈரானை அழைக்க செயல்படுகிறது.

ஈரான், யுரேனியம் செறிவூட்டலை முற்றிலும் கைவிட்டால், அமெரிக்கா பல்வேறு சலுகைகளை வழங்கும் திட்டத்தை முன்வைத்துள்ளது. இதில், ஃபர்தோவில் உள்ள செறிவூட்டல் மையத்தை அணுமின்சக்தி நிலையமாக மாற்றும் முயற்சியும் அடங்கும்.

இது தொடர்பாக, மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் கூறியதாவது:

“ஈரானுடன் விரிவான அமைதி ஒப்பந்தம் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். யுரேனியம் செறிவூட்டல் திட்டங்களை ஈரான் கைவிட்டு, அணுமின்சக்தி பயன்பாட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். அடுத்த வாரம் இப்பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு உள்ளது” என்றார்.

இந்த நிலைமைக்கு மத்தியில், இஸ்ரேல் – ஈரான் இடையிலான சண்டைநிறுத்தத்தை ஏற்படுத்த முக்கிய பங்கு வகித்த கத்தார், அமெரிக்கா – ஈரான் இடையேயான பேச்சுவார்த்தைகளிலும் தொடர்ந்தும் முக்கிய பங்காற்றும் என தெரிகிறது.

Facebook Comments Box