நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து – 4 பேர் நீந்தி கரை சேர்ந்தனர்; 2 பேர் காயம்

0

காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஸ்ரீதருக்குச் சொந்தமான விசைப்படகில், காசிமாநகர் 3-வது தெருவைச் சேர்ந்த ராஜா (61), மாசிலாமணி (60), சேகர், ஜெகன், விஜயமூர்த்தி மற்றும் சுதாகர் ஆகியோர் கடந்த 30ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

சென்னை கடற்கரையிலிருந்து சுமார் 58 கடல் மைல் தொலைவில், 1ம் தேதி அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, திடீரென காற்றும் கடலடி நீரோட்டமும் அதிகரித்தது. இந்த சூழ்நிலையில், படகிலிருந்த வலையுடன் வீசப்பட்ட கயிறு பாறையில் சிக்கியது.

நீரோட்டம் வேகமாக இருந்ததால் படகு பாறையை மோதித் தவறி கவிழ்ந்தது. இதையடுத்து, படகிலிருந்த ஆறுபேரும் கடலில் குதித்தனர். அவர்கள் மிதவை பயன்படுத்தி கரையை நோக்கிச் சென்றனர். ஆனால், ராஜா மற்றும் மாசிலாமணி கடலில் சிக்கி நீந்த முடியாமல் தவித்தனர், மற்ற நால்வரும் நீந்திச் சென்று ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா அருகே கரையேறினர்.

சென்னை திரும்பிய அவர்கள், காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், காணாமல் போன ராஜா மற்றும் மாசிலாமணியை, கடலோர காவல் படையினருடன் இணைந்து போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

Facebook Comments Box