தலிபான் தாக்குதலில் பாகிஸ்தானில் 16 வீரர்கள் பலி

0

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மற்றும் பலுசிஸ்தான் பகுதிகளில் பாகிஸ்தான் தலிபான் குழுவினர் அரசுக்கு எதிராக ஆயுதமெடுத்து போராடி வருகின்றனர். இந்நிலையில், வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் நேற்று, பாகிஸ்தான் தலிபானின் ஒரு தீவிரவாதி வெடிகுண்டுகள் நிறைந்த வாகனத்தை ஓட்டி கொண்டு வந்து, ராணுவ வாகனங்களை மோதச் சென்றார். இந்த தாக்குதலினால் 16 ராணுவத்தினர் உயிரிழந்தனர் மற்றும் 29 பேர் காயமடைந்தனர்.

Facebook Comments Box